Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் நாடு அரசு நடத்திய அயலக தமிழர் திருநாள் விழாவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை & நலச் சங்கத்திற்கு விருது 

ஜனவரி 14, 2024 11:18

சென்னை: வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் பெருமையை பறை சாட்டும் விதத்தில் அயலக தமிழர்கள் திருநாள் என தமிழ்நாடு அரசு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரம்மாண்டமாக விழா எடுத்து கொண்டாடி வருகிறது.

3 ஆம் ஆண்டாக இம் முறை தமிழ்நாடு அரசு நுங்கம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சிறுபான்மையினர் துறை அமைச்சரும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சா்  உதயநிதி ஸ்டாலின், இரண்டாம் நாளில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். 
இவ்விழாவிற்கு வெளிநாடு வாழ்  தமிழர்கள் நல அறக்கட்டளை  நலச்சங்கத்திற்கு முக்கியதுவம் கொடுக்கபட்டு சங்கத்தின் சேவைக்காக விருதும், சங்கத்தின் பணிகளை உலக அளவில் விழாவிற்கு  வருகை தந்து கலந்து கொண்ட அனைத்து தமிழர்களுக்கும் சேவை பணிகள் குறித்து விளக்கம் அளித்திட தனியாக ஸ்டாலும் தரப்பட்டது.

மேலும் சங்கத்தின் பிரதிநிதி ஒருவருக்கும் பேச வாய்ப்பளிக்க பட்டது இவை அனைத்தும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆதரவு தரும் மக்களால் கிடைத்தவையாக இருந்தாலும் இந்த அறிய வாய்ப்பை வழங்கிய வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், , அயலக திமுக மாநில தலைவா் கார்த்திகேய சிவசேனாதிபதி, அயலக திமுக மாநில செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர்கள் துபாய் மீரான், இலண்டன் முகம்மது பைசல், குவைத் அயலக திமுக பொறுப்பாளர் சிதம்பரம் ந.தியாகராஜன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட அனைத்து நாடுகளின் சங்கத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு குவைத் கத்தார், சவுதி, ஓமன், மாலத்தீவு, துபாய், லண்டன், அமெரிக்கா, ஜொ்மனி, கொரியா, மலேசியா, ஆப்ரிக்கா மற்றும் தமிழகத்தில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்