Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவசேனா கட்சி யுபிடி சார்பாக ஸ்ரீ ராமர் படத்திற்கு சிறப்பு பூஜை

ஜனவரி 22, 2024 07:46

சென்னை:  அயோத்தியில் ஸ்ரீராமபிரான் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவசேனா கட்சி யுபிடி சார்பாக சென்னை தாம்பரத்தில் ஸ்ரீ ராமர் படத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட ராமர் உருவப்படத்திற்கு வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மாநில தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் செந்தில், மாநில பொருளாளர் சிவசங்கர வாண்டையார், மாநில செயலாளர் மனோஜ்குமார், ஆன்மிக பிரிபு மாநில செயலாளர் பொன்னம்பலம், இளைஞர் அணி செயலாளர்கள் அர்ஜீன்குமார் மற்றும் மாநில இணை செயலாளர் சிவக்குமார் உட்படபலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்