Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களப்பணிகளைக் கண்காணிப்பதற்கான செல்போன் செயலி:  மின்சார வாரியம் தகவல்

பிப்ரவரி 06, 2024 03:57

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைப்பேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவி பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும்,  மின் நுகர்வோரின் புகார்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும் எனவும், இச்செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏபிகே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், பயன்படுத்தும் போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்