Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

பிப்ரவரி 06, 2024 04:02

சென்னை: சென்னையில் 3வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வரும் 10ம்தேதி தொடங்குகிறது.இதற்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் அன்னப்பறவை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், சுமார் ஒரு வாரம் வரை கண்காட்சி நடைபெறலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்