Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆஞ்சநேயர்  கோவில்  அருகே  மது அருந்தியதை,  தட்டி கேட்ட பெண் போலீஸ்: அவதூறாக பேசிய இந்து முன்னணியினர் 

பிப்ரவரி 06, 2024 04:06

மதுரை: தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கடந்த ஜனவரி 6 ஆம் தேதி இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது ரெயில் நிலையம் பகுதியில் பெண் போலீசார் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.அங்குள்ள ஆஞ்சநேயர்  கோவில்  அருகே  பொது இடத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த குபேந்திரன்,  ரவி உள்ளிட்ட 3 பேர் மது அருந்தியுள்ளனர்.அப்போது மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரிடம், ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள் என பெண் காவலர் கேட்டுள்ளார். 

அதற்கு அவர்கள், அந்த பெண் காவலரிடம் தகராறு செய்ததுடன், பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ரெயில் நிலையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவர் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான் விசாரனையில், இந்து முன்னணி என்றாலே  சமூகத்தில் ஒரு மரியாதை இருந்தது.

ஆனால், இது போன்ற நபர்களின் செயல்பாடுகளால் இந்த அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.போலீசாரே பார்த்து பயப்பட வேண்டிய சூழல் உள்ளது என கருத்து தெரிவித்த   நீதிபதி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த குபேந்திரன், ரவி உள்ளிட்ட 3 பேர் ஜாமின் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்