Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காந்திகிராமத்தில் புதிய உழவர் சந்தை திறப்பு விழா

மார்ச் 13, 2024 12:19

கரூர்,மார்ச்.13:2022-2023ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காந்திகிராமம் புதிய உழவர் சந்தையை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் கோல்ட்ஸ்பாட்ராஜா, கரூர் மாநகராட்சி 39 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சூரிய கலா பாண்டியன், நிலம் எடுப்பு சிறப்பு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் தெற்கு நகரச் செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், கரூர் மாநகராட்சி சிபிஎம் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வினோதா, வேளாண்மை துணை இயக்குனர் நாசர், வேளாண்மை அலுவலர் ஜெயந்தி, அனிதா, சீலா, ஜெயராமன், உதவி மேலாண்மை அலுவலர் ரமேஷ், முரளி, திமுக நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்