Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யம் அருகே தாயை கவனிக்க முடியாததால் ஏட்டு தற்கொலை

பிப்ரவரி 11, 2019 12:46

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியை சேர்ந்தவர் மாமணி (வயது 45). இவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மாமணிக்கும், வளர்மதி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவர்களுக்கு மதுமதி (12) என்ற மகளும், கலைமணி (9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தேத்தாக்குடியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 

மாமணி விடுமுறை கிடைக்கும் போது தேத்தாக்குடி சென்று அங்கு வசிக்கும் தனது பெற்றோருக்கு உதவிகள் செய்வது வழக்கம். கடந்த வாரம் மாமணியின் தாயின் உடல் நிலை மோசமடைந்தது. அவரை கவனித்து வந்த மாமணி திடீரென வி‌ஷம் குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றி வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமணி தற்கொலைக்கு அவர் தாயை கவனிக்க உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காத மன உளைச்சல் காரணமா? என்று விசரணை நடத்தி வருகின்றனர். தலைமை காவலர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்