Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்

மே 20, 2019 05:42

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது.  இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என பரவலாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்க மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி எஸ்.சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் மாயாவதி இன்று சந்திக்க திட்டமிடவில்லை எனவும், லக்னோவிலே மாயாவதி இருப்பார் என்றும் எஸ்.சி மிஸ்ரா கூறினார். 
 

தலைப்புச்செய்திகள்