Wednesday, 16th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலிஸ்டர் துணி தயாரித்தால் நல்ல லாபம் பெறலாம்

செப்டம்பர் 21, 2024 12:25

திருப்பூர், செப் 21:தொழில்துறையினர் முன் வர வேண்டும்.திருப்பூர் சிறு, குறு உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ,ஜோயா பேஷன், முகமது சபிக் பேட்டி. தீபாவளி பனியன் உற்பத்தி கடந்த வருடத்தை விட மிக மந்தமான நிலையில் உள்ளது. பாலிஸ்டர் துணி இந்திய சந்தையில் அதிகரித்த காரணத்தால் காட்டன் மார்க்கெட் குறைந்துள்ளது.  

பாலிஸ்டர் மூலப்பொருட்கள் நம்மிடம் இல்லை பாலிஸ்டரில் விதவிதமான துணிகள் தயாரிப்பு செய்து மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் பாலிஸ்டரையே மக்கள் அதிகமாக விரும்புவதால் காட்டன் குறைந்து வருகிறது. முன்னோரு காலத்தில் காட்டன் 100% இருந்து வந்தது. தற்போது 70 % சதவீதம் பாலிஸ்டர் ஆக்கிரமித்துள்ளது.

 சூரத், லூதியான, மும்பை போன்ற பெரு நகரங்களில் பாலிஸ்டர் மூலப்பொருட்கள் கிடைப்பதால் அங்கு தயாரிக்கராங்க.. திருப்பூர் தொழிற் துறையினர் அங்கிருந்து நூல்,   துணிகளை வாங்கி தயாரிப்பதால் டிரான்ஸ்போர்ட் செலவு அதிகரித்து வருகிறது. 
திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியை சேர்ந்த அனைத்து தொழிற்துயினரும், சங்கங்ககளும் இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காணவேண்டும்.  திருப்பூரிலேயே பாலிஸ்டர் துணிகளை தயாரிக்க அணைத்து வசதிகளும் இருக்கிறது. ஏற்றுமதி நிறுவனங்களில் காட்டன் உள்ளிட்ட துணி தயாரிப்பு அதிகரிப்பதால் பாலிஸ்டர் துணி தயாரிக்க திருப்பூரில் யாரும் முன் வருவதில்லை.

சூரத், லூதியான, மும்பை போன்ற இடங்களில் தயாரிக்கக்கூடிய ஆடைகளை விட  திருப்பூரிலேயே பாலிஸ்டர் துணிகளை உற்பத்தி செய்து விதவிதமாக டிசைனில் தயாரிக்கும்போது நல்ல லாபம் பெறலாம்.  திருப்பூரிலேயே பாலிஸ்டர் துணிகளை தயாரித்தல் 2500-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் துணிகளை வாங்க காத்திருக்கின்றனர். திருப்பூரிலேயே காட்டன், பாலிஸ்டர் துணிகள் அதிகளவில் தயாரிக்கும் போது வெளி சந்தையில் இருந்து வாடிக்ககையாளர்கள் அதிக அளவில் திருப்பூர் வர வாய்ப்பு உள்ளது.

சைனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய துணிகளுக்கு இந்திய சந்தையில் பெருமளவு மதிப்பு உள்ளது. அதேபோல் திருப்பூரில் தயாரிக்க கூடிய துணிகளுக்கும் மதிப்பு கூட வாய்ப்பு உள்ளது. எனவே பாலிஸ்டர் துணிகள் தயாரிக்க தொழிற்துறையினர் முன் வர வேண்டும். இதற்கான கலந்தாய்வு கூட்டம் தொழிற்துறையினர் கூட்ட வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என தெரிவித்தார் .

தலைப்புச்செய்திகள்