Wednesday, 16th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர், விஜயாபுரத்தில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21, 2024 07:41

திருப்பூர்,செப்.21: பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3, வார்டு-47, விஜயாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.  மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், புற்றுநோய், பல் மருத்துவம், காசநோய், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்ப நல சிகிச்சை மற்றும் ஆலோசனை பால்வினை நோய் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம்,  எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம்,  கண் சிகிச்சை தோல் சிகிச்சை, இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, சித்தா- யோகா மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நிகழ்ச்சியில்  3வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன், 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா, சுகாதார குழு தலைவர் மற்றும் 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நே.கவிதா, தி.மு.க.நல்லூர் பகுதிகழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி, வார்டு செயலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் பூபதி, வார்டு துணைச்செயலர் லட்சுமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நேதாஜி கண்ணன், சுகாதாரக்குழு தலைவர் கவிதா, நல்லூர் பகுதி மகளிர் அமைப்பாளர் மீனா, வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஜான்சன், ஷேக்  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்