Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு நபர் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தப்படாது: அமைச்சர் காமராஜ்

பிப்ரவரி 11, 2019 12:58

சென்னை: தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது விஜயதரணி (காங்) எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் ரேசன் கார்டு பலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். நாங்கள் தொகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்கள் பெரும்பாலானோர் தனியாக வசிக்கும் பெண்களாக உள்ளனர். 

அவர்களுக்கு கணவர் இல்லை. குழந்தைகள் ஆதரவு இல்லை. எனவே ஒருநபர் கார்டுகளுக்கு முகவரியை உறுதி செய்து பொருட்கள் வழங்குங்கள். ஆதார் அட்டையை கூட சரி பார்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே ஒரு நபர் கார்டை ரத்து செய்யாதீர்கள் என்றார். 

இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறுவது சரியான செய்தி இல்லை. 

தமிழகத்தில் ஒருநபர் கார்டு அதிகரித்ததால் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 33 ஆயிரம் கார்டுகள் மட்டும் ஒருநபர் கார்டு என கண்டறியப்பட்டது. அனைத்து பொருட்களை தனியாக பெறுவதற்காக இந்த கார்டை வாங்கியதாக தெரிகிறது. ஆனாலும் ஒரு நபர் கார்டுக்கு 5 கிலோ அரிசி மட்டும் கிடைக்கும். எனவே எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது. அவ்வாறு எங்கேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைப்புச்செய்திகள்