Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை

மே 22, 2019 05:34

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த மோஹித் மோர் என்பவர் டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர். இவர் டெல்லியின் நஜப்கர் பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் உடற்பயிற்சி நிலையத்துக்கு அருகே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் மோஹித்தை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் மோஹித் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த மூன்று நபர்கள் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோஹித்தின் சமூக வலைதள பக்கத்தில் வந்த பின்னூட்டங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்