Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தில் அதிக இடங்களில் மம்தா கட்சி முன்னணி வகிக்கிறது

மே 23, 2019 05:36

கொல்கத்தா: உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை கொண்ட 3-வது பெரிய மாநிலம் மேற்கு வங்காளம்.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் இருக்கிறது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய 4 கட்சிகள் களத்தில் உள்ளன. 4 முனை போட்டி இருந்தாலும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தான் நேரடியாக கடுமையான போட்டி நிலவுகிறது.

இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்காளத்தை மம்தா பானர்ஜி 2011-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 34 ஆண்டு கால இடதுசாரிகளின் ஆட்சிக்கு அவர் முடிவு கட்டினார். காங்கிரசில் இருந்து பிரிந்து அவர் 1998-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரசை நிறுவினார். கட்சி ஆரம்பித்த 13 ஆண்டுகளில் அவர் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும் இங்கு மம்தாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 34 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கடும் சவாலாக விளங்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்த முறை மோடியின் பிரசாரத்துக்கு அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த மாநிலத்தில் இருந்து கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பா.ஜனதா இருக்கிறது. 23 தொகுதிகள் வரை கைப்பற்றுவது பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் இலக்காக இருக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும்  பாரதீய ஜனதா  அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் பின்தங்கி இருந்தது. 
 
மேற்குவங்கம் மொத்த தொகுதிகள்- 42

தற்போதய முன்னிலை நிலவரம் வருமாறு :-

திரிணாமூல் காங்கிரஸ் - 20  இடங்கள்
பாஜக- 11
காங்கிரஸ்- 1

தலைப்புச்செய்திகள்