Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

40,000 புள்ளி கடந்து சாதனை படைத்த சென்செக்ஸ்

மே 23, 2019 07:25

மும்பை: இன்று வெளியாகி வரும் லோக்சபா தேர்தல் முடிவுகளில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ., அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளன.

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சிறிது நேரத்திலேயே பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட உற்சாகத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் துவக்கம் முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. காலை 10.30 மணியளவில் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை எட்டி உள்ளது.

2வது முறையாக மோடி பிரதமர் ஆக உள்ளதாக தேசிய பங்குச்சந்தை நிப்டி 12,000 புள்ளிகளை கடந்துள்ளது. பெரும்பாலான துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. குறிப்பாக வங்கித்துறை பங்குகள் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்