Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

மே 24, 2019 05:53

புதுடெல்லி: ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படும். கேபினட் பரிந்துரையை தொடர்ந்து, தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். இதையடுத்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார். 

17-வது மக்களவை அதாவது புதிய அரசு அடுத்த மாதம் 3 ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதியை சந்தித்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்த பிறகு புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கும். 

தலைப்புச்செய்திகள்