Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை: கமல்ஹாசன்

மே 24, 2019 06:20

சென்னை: மக்களவை தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் பேசியதாவது, வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 

எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம். நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை” என்றார்.

தலைப்புச்செய்திகள்