Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சஞ்சய் ராவத்

மே 24, 2019 07:34

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து வசைபாடி வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்பதை கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்