Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக இடைத்தேர்தலில் காட்டிய அக்கறையை நாடாளுமன்ற தேர்தலில் காட்டவில்லை

மே 24, 2019 09:58

தமிழகத்தில் அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போதுமானதாக  வெற்றி பெற்றுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிய கட்சிகள் மக்கள் நீதி மையம், அமுமுக என இரண்டு கட்சிகள் இந்த தேர்தலில்  போட்டியிட்டது.  தமிழக மக்கள் மத்திய அரசு மீது அதாவது மோடி அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதை இந்த தோல்வி முலம் நி ச்சயமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஹைட்ரோகார்பன் திட்டம், வடமாவட்டங்களில் எட்டு வழிச்சாலை பிரச்சனை,  கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி விவாகாரம் அது மட்டுமல்ல நீட் தேர்வு மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெற்றோர்கள்  மத்தியிலும் விரக்தியை ஏற்படுத்தியது.

இது போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் நினைப்பதாக கருதிய மக்கள் பாரதிய ஜனதா கட்சி மிது கோபத்தில் இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் எட்டு வழிச்சாலை தடை விதித்து இருந்தாலும், நிதன்கட்கரி பிரச்சாரம் செய்யும்போது  நி ச்சயமாக எட்டு வழிச்சாலை வரும் என தெரிவித்தது மக்கள் மனதில் எரிச்சலை  உண்டாக்கியது. அதிமுகவை பொறுத்தவரை தேர்தலில்  கூட்டணி கட்சிகளை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். 

அது மட்டுமல்ல அதிமுக வை பொறுத்தவரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் பிரச்சாரம்  செய்தார்கள் தேமுதிக தலைவர்  உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரால் பிரச்சாரம் திற்கு வர முடியவில்லை. அவர் மனைவி வந்து இருந்தாலும் பலம் என்னவே  விஜயகாந்த் மட்டுமே. அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவர் மட்டுமே.
இதில் ராமதாஸ் பிரச்சாரம் என்பது பொது கூட்டம் மட்டுமே, வாகனம் பிரச்சாரம் இல்லை. அன்புமணி தொகுதியில் முடிந்தளவு பிரச்சாரம்  செய்தார்.  இதை தவிற்து பாரதிய ஜனதா கட்சில் தமிழகத்தில் மோடி அமிர்ஷா பொது கூட்டம் பிரச்சாரம் தவிற தமிழக முழுவதும் பாரதிய  ஜனதா சார்பில் பிரச்சாரம் செய்ய ஆள் இல்லை.

புதிய தமிழகம் கட்சி தமிழகம் முழுவதும் இல்லை. இருந்தாலும் அவர் தொகுதியை பார்த்ததே அவருக்கு சரியாக இருந்தது.  தமிழ் ம £நில காங்கிரஸ் தலைவர் வாசன் பிரச்சாரம் பெரிதாக மக்கள் மத்தியில் போய் சேர வில்லை.  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  தமிழக முழுவதும் பிரச்சாரம் இல்லை.  இதை தாண்டி மாஸ் லீடர் பிரச்சாரம் என்பது இல்லை.

மக்கள் ஏற்கனவே முன்று முறை அதிமுகவுக்கு வாக்களித்து விட்டனர். அதாவது சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மீண்டும்  சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தி விட்டனர். ஏற்கனவே தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மீது உள்ள கோபம் அதிமுக இரண்டாக உருவாகி எம்ஜிஆர் அம்மா புகைப்படத்தை  இரண்டு கட்சியும் மாறி மாறி  பயன்படுத்தி குறை சொல்லி வாக்கு கேட்டனர்.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தந்த எந்த கட்சிகளையும் அதிமுக மதிக்கவில்லை. அதைவிட கொடுமை சரியான தகுதியான வேட்பாளர்  களை அதிமுக நிறுத்த வில்லை. மந்திரி இருந்தவர்கள் தலைமையை மிரட்டி சீட் வாங்கினர். முறையான பிரச்சாரம் என்பதே அதிமுகவில்  இல்லை. ஜெயலலிதா அம்மையார் இருந்த வரை அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தந்தார்.

இந்த முறை முஸ்லீம், யாதவர்கள் உள்பட சில சமூகத்தினர் முழுமையாக புறக்கணிக்கப்பட்டனர். இது சிறுபான்மையினர் இடையே  வெறுப்பை ஏற்படுத்தியது. யாதவர்கள் இடையே கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.  இடைத்தேர்தலில் வாய்ப்பு தருவார்கள் என இருந்து பே £து அங்கும் தர படவில்லை. இதனால் எதிர்ப்பு பலமாக இருந்த போது இதை யாரும் கண்டு கொள்ள வில்லை. குறிப்பாக அதிமுக  தலைமை கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தபடவில்லை. நடத்தி இருந்தால் பல கருத்துகள் பேசபட்டு இருக்கும்.

பொதுகூட்டம் மேடைகளில் கூட்டணி கட்சி தலைவர் பலர் கலந்து கொள்ளவே இல்லை. அதிமுக உட்கட்சி பூசல், ஏற்கனவே அமமுக  தனியாக செயல்படுவது  என பல பின்னடைவுகள் அதிமுகக்கு இருந்து இதை சரி செய்ய தலைமை முயற்சி செய்யவில்லை. 
அமைச்சர்ராக இருக்கு சிலர்  தன் இஷ்டதிற்கு பேசி மக்கள் இடையே வெறுப்பு வளர்த்தனர். குறிப்பாக ஏற்கனவே போட்டியிட்ட சிலருக்கு வாய்ப்பு தந்தது தவறு. அடுத்து விவசாயிகள் டெல்லி சென்று போராடிய போது மத்திய அரசு  பிரதமர் கண்டு கொள்ளவே இல்லை  என்பது தமிழக விவசாயிகள்க்கு வெறுப்பை உண்டாக்கியது.

அந்த நேரத்தில் ராகுல்காந்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக விவசாய கடன் தள்ளுபடி, மாதம் 6000 தருகிறேன், கல்வி கடன் தள்ளுபடி, ருபாய் 50 ஆயிரத்துக்கு நகை கடன் தள்ளுபடி என செய்த பிரச்சாரம் தமிழக மக்கள் இடையே புத்துணர்வு கொடுத்தது.
பிரச்சாரம் வியூகத்தை திமுக தலைமை சரியாக வகித்தது.  திமுக கூட்டணியில் பிரச்சாரம் செய்ய  ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி  வைகோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், சிறுபான்மையினர் கட்சி தலைவர்கள், மனித நேய மக்கள் கட்சி, கிருஸ்துவ அமைப்புகள் என நான்கு பக்கமும் பிரச்சாரம்  வியூகம் செய்து திமுக தலைமை சரியாக பிரச்சாரம் செய்தது.

அதிமுக ல் எதுவும் நடக்கவில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய அக்கறையை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக காட்டி இருந்தால் கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும்.  இனியாவது அதிமுக அரசு அம்மையார் ஜெயலலிதா போல் கட்சி நடத்தினால் தமிழகத்தில் அதிமுக வளரும். இல்லை என்றால் மக்கள் தீர்ப்புக்கு  தலைவணங்கி ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் ரஜினிகாந்த் கட்சி துவக்கினால் யாருக்கு பாதிப்பு என சொல்ல முடியாது.  கமல் ஓட்டு சராசரியாக பெற்று உள்ளார். கோகுல மக்கள் கட்சி சார்பில் பாரத பிரதமராக மீண்டும் அமர போகும் மோடிக்கு வாழ்த்துகள்.

- செங்கம் கு.ராஜாராம்,
மாநில இளைஞரணி செயலாளர்,
கோகுல மக்கள் கட்சி

தலைப்புச்செய்திகள்