Tuesday, 25th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவின் வாக்கு வங்கியில் கடும் வீழ்ச்சி

மே 24, 2019 10:05


சென்னை: இந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வாக்கு வங்கி பெரும் வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.மத்தியில் பாஜக கூட்டணி 350 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றியது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் இந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி பிடித்துள்ளது.
 
மேலும் கடந்த தேர்தலில் அதிமுக 37% வாக்குகளை பெற்றது.இந்த தேர்தலில் அதிமுக 18% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இதனால் கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட 18 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இழந்துள்ளது.இது அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதியதாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் சென்னையில் உள்ள மூன்று தொகுதியிலும் மூன்றாம் இடம் பிடித்தது மட்டுமில்லாமல் 3 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளை தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது.மேலும் நகர பகுதிகளில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்