Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய மந்திரி கனவில் ஓ.பி.எஸ். மகன்

மே 24, 2019 01:07


தேனி: தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட சிலர் போட்டியிட்டனர். இருந்தாலும் இந்த மூவருக்கும் இடையே தான் கடும் போட்டியும் நிலவி வந்தது.

தமிழகத்தில் ஆளுங்கட்சி சார்பில் 38 தொகுதிகளில் போட்டியிட்டும் கூட 37 தொகுதிகளில் அ.தி.மு.க.  கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் ஒரே தொகுதியான தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில கடும் போராட்டத்திற்கு இடையே வெற்றி பெற்றார். 

இந்த விசயம் ரவீந்திரநாத்குமாருக்கு தெரியவே மாவடட செயலாளர் சையதுகான், மாவட்ட துணைச்செயலாளர் முருக்கோடைராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாலையில் வாங்கினார்.

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத்குமாரும்... எனது இந்த வெற்றியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறேன் அதுபோல் வாக்களித்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சனைகளையும் கூடிய விரைவில்  தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்று கூறியவரிடம் தமிழகத்திலேயே நீங்கள் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்குமா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மந்திரி பதவியை பற்றி கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
 

தலைப்புச்செய்திகள்