Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 8.17 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு

மே 25, 2019 06:24

புதுடெல்லி: ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளர்களுக்காக, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் நோட்டா வாக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் தனி பட்டன்களும் அடங்கி இருக்கின்றன. இந்த வாக்குகள் சில நேரங்களில் முக்கிய வேட்பாளர்களின் வெற்றியையும் பாதிக்கின்றன.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக பீகாரில் 8.17 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருக்கின்றனர். இது மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2 சதவீதம் ஆகும்.

இதற்கு அடுத்ததாக டையூ மற்றும் டாமனில் 1.7 சதவீதம், ஆந்திராவில் 1.49 சதவீதம், சத்தீஷ்காரில் 1.44 சதவீதத்தினரும் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர்.

தனிப்பட்ட தொகுதியை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் 51,660 வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து உள்ளனர். நாட்டிலேயே மிகவும் அதிக அளவான இது, தொகுதியில் பதிவான வாக்குகளில் 5.04 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்