Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்

மே 27, 2019 05:42

சென்னை: தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உள்ளது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி உள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த போட்டியில், பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை” என்றார் செங்கோட்டையன்.

தலைப்புச்செய்திகள்