Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ

பிப்ரவரி 12, 2019 02:42

திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். 
 
அப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார். மேலும் அவர் பேசும் போது, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொண்டாடியது தனது மனதை மிகவும் உருக்கியது என்று, பேசி கொண்டிருக்கும் போது, திடீரென அவர் கண்கள் கலங்கி கதறி அழுதார். காந்தியின் உருவத்தை சித்தரித்த விதம் குறித்தும் கண் கலங்கியபடி கூறினார். 

மேலும் நான் ஓர் போராளி என்றும், எனக்கு தோல்வியே கிடையாது என்றார்‌. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, நாட்டில் மதச்சார்பின்மையை நிலை நாட்டுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன். மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது என்றார்.

தலைப்புச்செய்திகள்