Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

மே 28, 2019 05:38

சென்னை: தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்