Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 2 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

மே 28, 2019 06:43

புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது. ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 2 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க   உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  மேகதாது அணை திட்டம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து  விவாதிக்க கூடாது. மேகதாது குறித்து இனிவரும் கூட்டங்களிலும் விவாதிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.  

குறுவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகம்  ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கர்நாடகம் நீரை திறந்து விடுவது இல்லை. காவிரி  மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது என தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்