Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தை கவர பாஜக அதிரடி

மே 28, 2019 11:28

அகில இந்திய அளவில் மக்களின் தீர்ப்பு மோடிக்கு அமோக ஆதரவாகவும், தமிழக அளவில் மோடிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பாகவும் அமைந்ததை பாஜக அரசு உற்று கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தமுறை தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலர வச்சிடணும்னு பா.ஜ.க. எவ்வளவோ முயற்சி  பண்ணியும் அது பலிக்கலை. திமுக கூட்டணிக்கு எதிராக இலையையும் தாமரையையும் தோல்வி அடைந்ததை டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லப்படுகிறது.

சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்தும் கேரளாவில் பா.ஜ.க.வால் ஜெயிக்க முடியலை. இந்து விரோதிகள்னு தி.மு.க. கூட்டணியை விமர்சித்தும் தமிழ்நாட்டிலும் ஜெயிக்கலை. அதனால மாநிலப் பிரச்சினைகளை கையிலெடுத்தாதான், தமிழக மக்களைக் கவர முடியும்ங்கிற வியூகத்தில், 7 தமிழர்கள் விடுதலை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்குதாம். 

அதைப் புரிஞ்சிக்கிட்ட கவர்னர் புரோகித், அந்த ஏழுபேரில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை விடுவித்தால் சட்டச் சிக்கல் எதுவும் ஏற்படுமா? அப்படியே அவர்களை விடுவித்தாலும் அவர்கள் இங்கே தொடர்ந்து தங்குவதற்கு இந்திய அரசு அனுமதிக்குமா? இல்லை அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பினால், அங்குள்ள அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும்படி சட்ட ஆலோசகர்களிடம் கேட்டிருக்கிறாராம்.

தலைப்புச்செய்திகள்