Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செயற்கை மழை பெய்ய வைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு: மராட்டிய அரசு

மே 28, 2019 12:26

மும்பை: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் நிலவும் வறட்சியால் செயற்கை மழையை பெய்ய வைக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

பருவமழை காலத்தில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நீடிப்பதால் செயற்கை மழையை பெய்ய வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு  செயற்கை மழையை பெய்விக்க மராட்டிய மாநிலம் சோலாப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின் துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்த்துகள்களாக மாறி மழையாக பொழியும். இத்திட்டம் புனேயில் உள்ள இந்திய தட்பவெப்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் சோலாபூரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற செயற்கை மழையை பொழிய செய்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்