Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பு

மே 30, 2019 08:12

ஐதராபாத்: ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, 46, இன்று(மே 30) முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

லோக்சபா தேர்தலுடன், ஆந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., 151ல் வென்றது. இதுவரை ஆளுங்கட்சியாக இருந்த, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம், 23ல் மட்டும் வென்று, படுதோல்வி அடைந்தது. நடிகர் பவன் கல்யாணின், ஜனசேனா, ஒரு தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து விஜயவாடாவில் நடந்த விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அமைச்சர்கள், ஜூன் 6 ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு அறிவித்துள்ளார். அவருக்கு பதில் அவரது கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மேலும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்