Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல் காந்திக்கு எதிராக கட்சி தலைவர்களே சதி செய்தனர் : பீகார் காங்கிரஸ் தலைவர்

மே 30, 2019 01:01

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 5 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை. இன்று முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் கட்சி தலைவர்களே சதி செய்ததாக பீகார் காங்கிரஸ் தலைவர் ஷியாம் சுந்தர் சிங் திராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலுக்கான சீட், ஏலத்தின் அடிப்படையிலே விற்கப்பட்டது. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. மத்திய தலைமையின் உத்தரவுகள் உள்நோக்கத்துடன் மறைக்கப்பட்டன. கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  சதியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தலைவராக இல்லாவிட்டால், ஒட்டுமொத்த கட்சியும் அழிந்துவிடும்  என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்