Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 31, 2019 10:07

புதுடெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது.  57 மந்திரிகளை கொண்ட புதிய கூட்டணி மந்திரிசபைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை பொறுப்பு அமித்ஷாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை பொறுப்பு ராஜ்நாத்சிங்கிடமும், நிதி அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் மோடி தன் வசம் வைத்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்