Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அமைச்சரவையில் புதிய துறை

மே 31, 2019 12:04

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 24 மத்திய இணையமைச்சர்கள் என மத்திய அமைச்சரவையின்  மொத்தம் எண்ணிக்கை 58 (INCLUDING PM) ஆக உள்ளது. 

இதில் மத்திய உள்துறை அமித்ஷாவுக்கும், பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங்கிற்கும், நிதித்துறை நிர்மலா சீதாராமனுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்படுள்ளது. அதே போல் மத்திய அமைச்சரவையில் ஆறு பெண் எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய மத்திய அமைச்சரவையில் புதியதாக ஒரு அமைச்சகம் இடம் பெற்றுள்ளது.

அந்த அமைச்சரவை கேபினட் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. அந்த துறையின் அமைச்சகத்தின் பெயர் "ஜல் சக்தி" (ministry of Jal Shakti) ஆகும். இந்த துறையின் மத்திய அமைச்சராக  கஜேந்திர சிங் ஷெகாவத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 'ஜல் சக்தி துறை' என்பது குடிநீருக்கான அமைச்சகம் ஆகும். 

நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. எனவே தண்ணீர் வளத்தை அதிகரிக்கவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், இந்த அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளும். அத்துடன் நீர் வளத்தை பாதுகாப்பது, நீர் வளத்தை பெருக்குவது, அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கவும் இந்த அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய 'ஜல் சக்தி துறை' அமைச்சகத்தின் இணையமைச்சராக ரத்தன் லால் கட்டாரியா பொறுப்பேற்றுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்