Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி மாநிலத்தின் புதிய சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து இன்று சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டார்

ஜுன் 03, 2019 10:06

புதுச்சேரி

: புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே சட்டமன்ற செயலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியும் நேற்று மதியம் 12 மணி வரை தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து காங் தரப்பில் துனை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து சட்டமன்ற செயலர் வின்சென்ட் ராயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர் கட்சி தரப்பில் யாரும் போட்டியிடாததால், காங்.சிவக்கொழுந்து சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் சிவக்கொழுந்து புதிய சபாநாயகராக இன்று சட்டமன்ற வளாகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன், திமுக எம் எல் ஏ சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளான இன்று சிவக்கொழுந்து  சபாநாயகராக பதவி ஏற்றுள்ளது கால சிறப்பாகும்..என்றார். இதுபோன்று அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்களும் கலைஞர் பிறந்த நாளை கோடிட்டு பேசினார். இந்த கூட்டத்தில் காங், திமுக எம் எல் ஏ..க்கள், சுயேச்சை எம் எல் ஏ..வும் கலந்துகொண்டனர்..

தலைப்புச்செய்திகள்