Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரதியாருக்கு காவி தலைப்பாகை அட்டை படத்தால் சர்ச்சை

ஜுன் 04, 2019 08:11

சென்னை: தமிழக அரசு பள்ளி பாட புத்தகங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக்கழக தலைவர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அட்டையில் ஒரு பெண் நடனமாடுவது போன்ற காட்சி, கோவில் படங்கள் மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போல படம் இருக்கிறது. இந்த படம்தான் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது. மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது என்று கூறினார்.

இதுசம்பந்தமாக பாடநூல் கழக தலைவர் வளர்மதியிடம் கேட்டபோது, காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கருதுவது தவறு. இது மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ, மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை. இதில் தவறு நடந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்