Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு தனி அமர்வு கலைப்பு: உயர்நீதிமன்றம்

ஜுன் 04, 2019 09:06

சென்னை: தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது.
 
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். 

பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்து உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று இந்த சிறப்பு தனி அமர்வை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்