Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் பயங்கரவாத இயக்க தலைவர்கள் 3 பேர் கைது

ஜுன் 05, 2019 10:31

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஷ் சயித் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்க தலைவர்களுக்கு நிதி உதவி செய்தது தெரிய வந்தது.
 
இது தொடர்பாக அவர் மீதும் மற்றொரு பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாகுதீன் உள்பட 10 காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காஷ்மீரை சேர்ந்த சபிர்ஷா, ஆசியா அந்த்ராபி மற்றும் ம‌ஷரத் ஆலம் பாட் ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 3 பேரும் டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் 15 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி ராகேஷ் சயலிடம் அனுமதி கேட்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

சபிர்ஷா, அந்த்ராபி ஆகிய இருவரும் ஏற்கனவே வேறு சில வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தனர். இதேபோல ஆலம் மற்றொரு வழக்கில் கைதாகி ஜம்மு-காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் 3 பேரையும் முறையான ‘வாரண்டு’ பெற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் காஷ்மீரை சேர்ந்த பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை கைது செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்