Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மெட் அணியாதவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது?: ஐகோர்ட் கேள்வி

ஜுன் 06, 2019 10:03

சென்னை: ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஹெல்மெட் அணிவது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஹெல்மெட் அணியாத போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிபதிகள், ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணியவில்லை என கண்டித்த நீதிபதிகள், ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்