Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்: ஜாமின் மனு தள்ளுபடி

பிப்ரவரி 16, 2019 12:51

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

துபாயில் இருந்த அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர். 

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த இருமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கிறிஸ்டியன் மைக்கேலை ஜாமினில் விடுவிக்கக்கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார்.  

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை ஜாமினில் விடுதலை செய்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார். எனவே அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து,கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் இன்று இன்று தள்ளுபடி செய்தார். 

தலைப்புச்செய்திகள்