Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வரி விலக்கு வரம்பு?

ஜுன் 21, 2019 08:15

புதுடில்லி: மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்த நிலையில் தற்போது நாட்டின் முழுபட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய அம்சம் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா? என்பதுதான். தற்போது வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக இருந்து வரும் நிலையில் இந்த தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் என்பதால் இதில் சில வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் முன் ஜிடிபி சரிவு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு செய்வது, நிதி பற்றாக்குறை போன்ற சவால்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்