Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுன் 22, 2019 07:46

கும்பகோணம்: நீட் தேர்வை கண்டித்து கும்பகோணம் அரசு ஆடவர் கல்லுாரி வாயிலில் திமுக மற்றும் அனைத்து மாணவர் இயக்ககங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தை நகர செயலாளர் தமிழழகன் தொடங்கி வைத்தார். 
இந்திய அரசியலைமைப்பு சட்டத்தினை அட்டவனை 8 ல் உள்ளதை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து அரசு வெளியிடவேண்டும், புதிய வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியக்கல்வி முறையை ஜனநாயக படுத்துவற்காக இதுவரை எடுத்து கொண்ட அனைத்து தீவிர முயற்சிகளையும் நீர்த்து போகச்செய்து விடும் என்பதால்,  வரைவு மீதான கருத்துக்களை 6 மாதகாலத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

கஸ்துாரி ரங்கன் குழுவின் புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கும் சம உரிமைக்கும் எதிராக இருப்பதால்,  இந்த வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இது பற்றி விவாதம் நடைபெறும் போது, கல்வி துறை அமைச்சர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.மறைமுக சமஸ்கிருதத்தை திணிக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்தும், நீட் தேர்வை திணிப்பதை கண்டித்து கண்டன கோஷங்களிட்டு, கல்லுாரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்