Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெடுஞ்சாலைதுறை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம்

ஜுன் 22, 2019 08:00

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தினார். தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலை துறை பொறியாளர்களும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகள் எந்த அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது எத்தனை பணிகள் நிலுவையில் உள்ளது. என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை வர உள்ளதால் அது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்