Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவில் கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் இணைந்தார்

ஜுன் 27, 2019 08:54

புதுடெல்லி: கேரள முன்னாள் காங்., தலைவரும் எம்.பி.,யுமான அப்துல்லா குட்டி, இன்று டில்லி பா.ஜ., செயல் தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். இவர், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதற்காக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். 

கேரளா மாநிலத்தின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் அப்துல்லா குட்டி(52). இவர் 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்.
 
அப்துல்லா குட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த மாதம் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். அவரது அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார். இதையடுத்து,அப்துல்லா குட்டி காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அப்துல்லா குட்டி இன்று டெல்லிக்கு சென்றார். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். 

இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்த அப்துல்லா குட்டி, பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

தலைப்புச்செய்திகள்