Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக சட்டசபை ஒத்திவைப்பு: மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கட்கிழமை முதல் நடக்கும்

ஜுன் 28, 2019 06:56

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடியது. முதல் நாளான இன்று சபை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

மேலும், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை (ஜூலை 1) மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க உள்ளது. திங்கட்கிழமையன்று வனம் மற்றும் சுற்றுச்சசூழல் மற்றும் வனத்துறை குறித்த விவாதம் நடைபெறும்.

அதன்பின்னர் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் பதிலுரை வழங்க உள்ளனர். மேலும் அரசின் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப் படுகின்றன. ஜூலை 30-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

தலைப்புச்செய்திகள்