Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதைவட மின்கம்பிகள் நாகையில் பொருத்தும் பணி தொடங்கியது

ஜுலை 01, 2019 06:27

சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டமன்றம் இன்று காலை மீண்டும் கூடியது. சபை கூடியதும் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்  கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, தொகுதி சார்ந்த பிரச்சினைகள் அடிப்படையில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்களை குறிப்பிட்டு பேசிய அவர், நவரத்தினங்களை பேரவையில் அமரவைத்து அழகு பார்க்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உயர்மின்கோபுர மின்கம்பிகளை மாற்றி புதைவட மின்கம்பி பொருத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். முதல்வர் உத்தரவின்பேரில், வேளாங்கண்ணியில் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நகர்ப்புற பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில்  துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான நிலம்  கிடைப்பதில்  சிக்கல் உள்ளது என்றும் அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்