Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் டாக்டர்--கார்செட்டில் 60 ஆயிரம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு

ஜுலை 01, 2019 07:44

வேலூர்: வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தியுள்ளார். வேலூர் பாகாயம் அடுத்த துத்திப்பட்டில் வசிப்பவர் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி. சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சத்யா சி.எம்.சி. மருத்துவ கல்லூரி பேராசிரியர். இவர்களது வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளார்கள்.

60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த தொட்டியில் மொட்டைமாடி, கார்செட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழாய்களை இணைத்துள்ளனர்.மழை பெய்யும்போது மழைநீர் நேராக தொட்டிக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சமையல் செய்யவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் உபயோகிக்கின்றனர்.

இதுபற்றி டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி கூறியதாவது:-

கடந்த 2015ம் ஆண்டு மழைநீரை சேகரிக்க முடிவு செய்தோம். இதற்காக வீட்டில் கார்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து அதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டினோம். அதில் குழாய்களை இணைத்து மழைநீரை சேகரித்து வருகிறோம். எங்கள் வீட்டில் 4 பேர் உள்ளனர். சமையல், குடிநீர், குளிக்க இந்த தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம்.

இந்த தண்ணீர் எங்களுக்கு 8 மாதங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்றார். மேலும் இவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு அடியிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளார். மொட்டை மாடியில் சோலார்பவர் சிஸ்டம் அமைத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்