Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்.. சேலத்தை கலக்கும் போஸ்டர்கள்!

ஜுலை 01, 2019 11:21

சேலம்: ரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்! கலக்கும் போஸ்டர்கள்! -வீடியோ சேலம்: ரோகிணிதான் எங்களுக்கு திரும்பவும் கலெக்டராக வரவேண்டும் என்று சேலத்தில் போஸ்டரே அடித்து ஒட்டிவிட்டார்களாம்! 171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி. "சின்ன வயசு பெண்.. பம்பரம் மாதிரி சுழன்று வேலைபார்க்கிறாரே.. மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று பலரால் பேசப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது, பள்ளி மாணவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி கொள்வது என மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார். மறுபக்கம், கேலிகளாகவும், கிண்டல்களாகவும், மீம்ஸ்களாகள் உலா வந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் ரோகிணி மாற்றம் என்ற செய்தி வந்த. என்ன காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், எப்படியோ இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று மட்டும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்த ரோகினி, சென்னை இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

 இந்நிலையில், கலெக்டர் ரோகிணியை மாற்றம் செய்யக்கூடாது, அவர்தான் எங்களுக்கு கலெக்டராக வரவேண்டும் என்று அரசின் அறிவிப்பு வந்த அன்றே கோரிக்கை எழ ஆரம்பித்தது. இப்போது போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியே விட்டார்கள். அகில பாரத இந்து மகா சபை சார்பில்தான் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "தமிழக அரசே! தமிழக அரசே!! நேர்மையாக செயல்பட்ட திறமையன சேலம் மாவட்ட பெண் ஆட்சித்தலைவர் ரோஹிணியை பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீணடும் ஆட்சிதலைவராக பணியமர்த்த வேண்டும்" என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்