Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.பி., ஆனாலும் விவசாயி

ஜுலை 01, 2019 12:07

பாலக்காடு : எம்.பி.,யாக வெற்றி பெற்றாலும், தான் ஒரு விவசாயி தான் என்று நிலத்தில் இறங்கி நாற்று நட்டு வருகிறார், கேரளாவின் இளம் பெண் எம்.பி., ரம்யா.

மா.கம்யூ., கோட்டையான கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தொகுதி ஆலத்தூர். இங்கே மா.கம்யூ., கட்சி கடந்த 36 வருடங்களாக  வென்று வந்தது. இந்தத் தொகுதியில் முதன்முறையாகக் காங்கிரஸ் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்தவர் ஓர் இளம் பெண். 32 வயதான ரம்யா ஹரிதாஸ் என்பவர்தான் அவர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மா.கம்யூ., வை சேர்ந்த பிஜூவை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் 

 கோழிக்கோட்டைச் சேர்ந்த ரம்யா பட்டியலினத்தை சேர்ந்தவர். விவசாயம்தான் அவரது உயிர் மூச்சு. தன் அரசியல் பணிகளுக்கிடையே விவசாயத்தை ரம்யா மறந்துவிடவில்லை. தற்போது, கேரளாவில் மழை பெய்துவருவதால் பரவலாக நடவுப் பணிகள் நடந்து வருகின்றன.

ரம்யாவும் தான் ஒரு எம்.பி., என்பதை மறந்துவிட்டு விவசாயியாக மாறியுள்ளார். தன் நிலத்தில் நாற்று நடும் பணிகளைத் தொடங்கினார். டிராக்டர் கொண்டு தன் நிலத்தைத் தானே உழுதார். பின்னர், சக தொழிலாளர்களுடன் சேர்ந்து ரம்யாவும் நாற்று நட்டு நடவுப் பணிகளை மேற்கொண்டார்.

ரம்யாவின் தந்தை சாதாரண கூலித் தொழிலாளி, தாயார் டெய்லர். இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அளித்த இலவச வீட்டில் வசித்து வருகிறார். இந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.பி இவர்தான். கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது பட்டியலினப் பெண் என்கிற பெருமையும் ரம்யாவுக்கு உண்டு.

தலைப்புச்செய்திகள்