Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் மக்கள் வெளியேற வரவேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை

ஜுலை 02, 2019 07:27

மும்பை,: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் கனமழை பெய்து வருகிறது. மராட்டிய  மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 

குறிப்பாக மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பஸ், ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சேவைகள் மட்டும் செயல்படுகின்றன. இன்றும் கனமழை பெய்வதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு தேவையின்றி  வெளியே வர வேண்டாம் என்று  முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்