Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை அம்பத்தூரில் 7 டன் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்

ஜுலை 02, 2019 07:44

அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் தயாரிக்கும் கம்பெனி செயல்படுவதை கண்டுபிடித்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள், 7 டன் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அம்பத்தூர், சமுதாரியா நகர், 2-வது மெயின் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கப்புகள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டல சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று திடீரென அந்த கம்பெனிக்கு சென்று மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது டீ மற்றும் குளிர்பானங்கள் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கப்புகள் தயாரித்து வருவது தெரியவந்தது. அங்கு பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து அந்த கம்பெனியில் தீவிர சோதனை செய்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள், அந்த கம்பெனியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட 7 டன் பேப்பர் கப்புகள் மற்றும் அதனை தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த கம்பெனிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து விசாரணை செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்