Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயல்பு நிலைக்கு திரும்பும் மும்பை

ஜுலை 04, 2019 06:31


மும்பை :வரலாறு காணாத மழை பெய்த மும்பையில், மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. குறைவான எண்ணிக்கையில், புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் தொங்கிக் கொண்டு, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

 இங்கே, தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.தலைநகர் மும்பை, புறநகர் பகுதிகள் மற்றும் புனேயில், ஐந்து நாட்களாக, கனமழைகொட்டியது.சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.சுவர் சரிந்தது உள்ளிட்ட விபத்துகளில், 30 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கைமுடங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்று இயல்பு நிலை, மெதுவாக திரும்ப ஆரம்பித்தது. சாலைகளில் வெள்ளம் குறைந்தது. பஸ் மற்றும் ரயில்கள், ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டன. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன.

ஆனால், 'ஸ்கைமெட்' என்ற, தனியார் வானிலை ஆய்வு நிறுவனம், மும்பையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு, கனமழை பெய்யும் என, கூறியுள்ளது.இது குறித்து பேசிய, மும்பை மாநகராட்சி அதிகாரி, 'மழை, வெள்ள மீட்பு பணிக்கு, தயார் நிலையில் இருக்கிறோம். கடந்த, இரண்டு நாட்களாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. சாலையில் நீர் வடியத் துவங்கியுள்ளது. விரைவில் முழு இயல்பு நிலை திரும்பும்' என்று தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்