Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

158.72 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள் : முதல்வர் தொடங்கி வைத்தார்

ஜுலை 04, 2019 10:43

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.158 கோடியே 72 லட்சம்  மதிப்பீலான 500  புதிய  பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள் தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.  

இந்தநிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 150 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 110 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும் என மொத்தம் ரூ.158 கோடியே  72 லட்சம் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தலைப்புச்செய்திகள்